Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னடா இது பாகுபலிக்கு வந்த சோதனை: படத்த வாங்க ஆள் இல்லையா?

Advertiesment
என்னடா இது பாகுபலிக்கு வந்த சோதனை: படத்த வாங்க ஆள் இல்லையா?
, வெள்ளி, 31 மார்ச் 2017 (12:52 IST)
பாகுபலியின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 2 ஆம் பாகத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். 


 
 
பாகுபலி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியின் காரணமாக 2 ஆம் பாகத்திற்காக பட விநியோகம் செய்யும் வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
 
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாகுபலி 2 படத்தின் விநியோகம் மிக ஜோராக நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது. கர்நாடகா பட்ஜெட்டின் போது, சினிமா டிக்கெட் விலை அதிகபட்சம் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 
 
இதன் காரணமாக அதிக விலை கொடுத்து பாகுபலி 2 ஆம் பாக படத்தை வாங்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை. இதனால் கர்நாடகாவில் படத்தை எப்படி விற்பது என்ன கவலையில் உள்ளார் பாகுபலி தயாரிப்பாளர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்கிட்டே இருப்போம்: அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் பேச்சு!