Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ஆர்யாவுக்குப் பெண் குழந்தை #BabyGirl,…

Advertiesment
நடிகர் ஆர்யாவுக்குப் பெண் குழந்தை #BabyGirl,…
, வெள்ளி, 23 ஜூலை 2021 (23:36 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவர்  கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,மகாமுனி, காப்பான் , டெடி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்திருந்தார் ஆர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேற்று ரிலீஸாக சார்பாட்டா பரம்பரை வெற்றி பெற்றுள்ளது. ஆர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  ஆர்யா -சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா -விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகின்றனர். ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார்.

ஆர்யா இரட்டை சந்தோஷத்தில் இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிகழ்ச்சியில் லாபம் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி