பாகுபலி 2 வசூலில் ஆயிரம் கோடி பிடித்து சாதனை!
, திங்கள், 8 மே 2017 (10:39 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் ஏப்ரல் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸான படம் ‘பாகுபலி 2’. ராஜமௌலியின் பாகுபலி பட பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. இவை தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி, லமையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஹிந்தி படங்களில் அதிக வசூல் படைத்த தங்கல், சுல்தான் ஆகிய படங்களின் கலெஷன் சாதனையை தற்பொழுது அந்த வசூல் சாதனையை தாண்டி விட்டது. உலக அளவில் இதுவரை சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ. 1,000 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய வசூல் சாதனைகளை பாகுபலி நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த கட்டுரையில்