ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் விருது பெற்று பாரத நாட்டிற்கே பெருமை தேடி தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்கிய Le Mask என்ற திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உலகமே போற்றி கொண்டாடி வரும் இந்தியாவின் சாதனை திரைப்படமான 'பாகுபலி 2' போன்ற படத்தை இயக்குவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வாறு கூறியுள்ளார்
'பாகுபலி போன்றொரு பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்க, நம்மிடம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதைச் செய்யட்டும். கூடுதலாக, என்னிடம் 200 கோடி ரூபாய் இல்லை. நான் இசையை, அழகை, காட்சிகளை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் வெளிவர விரும்பாத அளவுக்கான ஒரு உலகத்தை நான் உருவாக்க விரும்புகிறேன். கதையில் வரும் எதிர்மறை காட்சிகளைக்கூட கவித்துவமாகவே நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
ரூ200 கோடி பணம் இருந்தாலும் எல்லோராலும் 'பாகுபலி' போன்ற படத்தை இயக்கிவிட முடியாது. 100 வருட சினிமா உலகில் 'பாகுபலி' ஒரு புரட்சியை ஏற்படுத்திய, எல்லோரையும் பேச வைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.