Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அய்யப்பனும் கோஷியும் படத்தில் ஒப்பந்தமான நடிகைகள்!

அய்யப்பனும் கோஷியும் படத்தில் ஒப்பந்தமான நடிகைகள்!
, புதன், 7 ஜூலை 2021 (16:26 IST)
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஐய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க இருந்த சாய்பல்லவி அந்த படத்தில் இருந்து வெளியேறிய நிலையில் நித்யா மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படம் இப்போது தெலுங்கில் ராணா மற்றும் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அதே போல பவன் கல்யாணுக்கு நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வயசுல இப்புடியா? அஜித் நடிகையின் ஒர்க் அவுட்டை கண்டு மிரளும் நெட்டிசன்ஸ்!