Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியில் ரீமேக் ஆகும் அய்யப்பனும் கோஷியும்… கதாநாயகர்கள் அறிவிப்பு!

இந்தியில் ரீமேக் ஆகும் அய்யப்பனும் கோஷியும்… கதாநாயகர்கள் அறிவிப்பு!
, திங்கள், 22 மார்ச் 2021 (08:11 IST)
இந்தியில் உருவாக உள்ள அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் ஜான் ஆப்ரஹாம் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படம் இப்போது தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. தெலுங்கில் ராணாவும் பவன் கல்யாணும் நடிக்க உள்ள நிலையில் இந்தியில் ஜான் ஆப்ரஹாம் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக தோஸ்தானா படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த படத்தின் உரிமையை பெற்று வைத்துள்ள கதிரேசன் விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஹரியின் கொரோனா சோதனை முடிவு வெளியானது!