‘அயோத்தி’ புகழ் மந்திரமூர்த்தி என்ன செய்கிறார்?... அடுத்த படம் குறித்த அப்டேட்!

vinoth
புதன், 3 செப்டம்பர் 2025 (10:58 IST)
சசிகுமார், CWC புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. பின்னர் ஓடிடியில் வெளியாகி அங்கும் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி கவனிக்கப்படும் இய்ககுனரானார். ஆனால் அந்த படம் ரிலீஸாகி 2 ஆண்டுகள் கழித்தும் அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. முதலில் அயோத்தி படத்தின் தயாரிப்பாளருக்கே அடுத்த படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. பின்னர் மதுரை அன்புச்செழியனுக்காக ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டு படங்களுமே அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அவர் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments