Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயலான் படத்தின் டீசர் ரெடி… எப்போ ரிலீஸ்?

அயலான் படத்தின் டீசர் ரெடி… எப்போ ரிலீஸ்?
, திங்கள், 15 மே 2023 (09:09 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டீசர் ஒன்றை படக்குழு தயார் செய்துள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸோடு அயலான் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் வினோத் இணையும் படத்தின் நிலை என்ன?... லேட்டஸ்ட் தகவல்!