எத்தனை படங்கள் வந்தாலும் அவதார் திரைப்படத்தின் வசூலை தோற்கடிக்க முடியாது போல. உலகிலேயே இதுவரை அதிக பணம் வசூல் செய்தது அவதார் திரைப்படம். அதன் வசூலை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவெஞ்சர்ஸ் மண்ணை கவ்வியுள்ளது.
10 வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “அவதார்” திரைப்படம் வசூலை வாரி குவித்தது. தியேட்டர்களில் டிக்கெட்டுகள் குறைவாக விற்ற அந்த காலத்திலேயே மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. அதற்கு முன் இதே ஜேம்ஸ் கேமரூன் இயக்கி 1997ல் வெளியான “டைட்டானிக்” திரைப்படம்தான் உலகளாவிய வசூலில் முதலிடத்தில் இருந்தது.
கிட்டத்தட்ட அவதார் வெளியான பிறகான இந்த 10 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் பிரபலமாகி விஸ்வரூபம் எடுத்தது அவெஞ்சர்ஸ். அவெஞ்சர்ஸ் தொடரின் 23வது படமான “அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்” உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஏப்ரல் இறுதியில் வெளியான எண்ட் கேம் மொத்தமாக 2 பில்லியன் டாலர்கள் வரை வசூலித்தது. எப்படியாவது அவதாரை தோற்கடிக்க வேண்டும் என நினைத்த மார்வெல் ஸ்டுடியோஸ் சில வெட்டப்பட்ட காட்சிகளை இணைத்து படத்தை மறுபடியும் போன வாரம் ரிலீஸ் செய்தார்கள்.
ஆனாலும் 764 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூலித்து இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது எண்ட் கேம். இன்னும் நான்கு முறை ரீ ரிலீஸ் செய்தால் வேண்டுமானால் அவெஞ்சர்ஸ் வசூலில் அவதாரை தோற்கடிக்க முடியும்.