Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி நேரத்தில் நடக்கும் குளறுபடி… அவதார் 2 –வை ரிலீஸ் செய்யாத பல தியேட்டர்கள்!

கடைசி நேரத்தில் நடக்கும் குளறுபடி… அவதார் 2 –வை ரிலீஸ் செய்யாத பல தியேட்டர்கள்!
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:12 IST)
அவதார் 2 திரைப்படம் இன்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் பல திரையரங்குகள் தாங்கள் படத்தை ரிலீஸ் செய்யவில்லை என அறிவித்துள்ளன.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 16ல் (இன்று) வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

இந்நிலையில் அவதார் 2 வெளியீட்டு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தியேட்டர் நிர்வாகங்களிடம் பங்கு தொகையாக அதிக தொகை கேட்பதாகவும், அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லை என்பதாகவும் சொல்லப்பட்டது. கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வராததால் பல முன்னணி திரையரங்குகள் தாங்கள் அவதார் படத்தை ரிலீஸ் செய்யவில்லை என இப்போது அறிவித்துள்ளனர்.இதனால் நல்ல தரத்துடன் கூடிய திரையரங்குகளில் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடிக்காக சினிமா எடுப்பது அழிவுக்கு வழிவகுக்கும்… தேசிய விருது இயக்குனர் ஆதங்கம்!