Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையதளத்தில் லீக் ஆன அவதார் -2 படத டிரைலர் ! படக்குழு அதிர்ச்சி

avatar-2
, செவ்வாய், 3 மே 2022 (16:04 IST)
அவதார் 2 படத்தின் டிரைலர் வீடியோ  இணையதளத்தில் கசிந்ததால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் உலகில் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படம் வசூலில் உலக சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  நிலையில், அவதார்-2 படத்தின் டிரைலர் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதைச் சற்றும் எதிர்பாராத படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த படத்தின் டிரைலர் வரும் மே மாதம் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தோடு திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷ்மிகாவால் தாமதமானதா தளபதி 66 ஷூட்டிங்?