கொரோனா பாதிப்பால் திரைத்துறையே ஸ்தம்பித்துள்ள நிலையிலும் அவதார் 2 படத்தின் ரிலீஸும் பாதிக்கப்பட்டது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் அவதார். உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புகளால் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த அவதார் 2 படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும் ஏற்கனவே முடிக்கப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதான கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்டவற்றிற்கு பணியாளர்களை வீட்டிலிருந்தே தயார் செய்யுமாறு கூறியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாவதாக முன்னரே அறிவித்திருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தள்ளிப் போனது. இந்நிலையில் இப்போது டிசம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டு இடைவெளிகளில் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.