Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4500 கோடி வசூலைத் தாண்டிய அவதார் 2… உலகம் முழுவதும் வசூல் மழை!

4500 கோடி வசூலைத் தாண்டிய அவதார் 2… உலகம் முழுவதும் வசூல் மழை!
, வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:18 IST)
அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸானது. அன்று முதல் உலகளவில் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்தியாவில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையிலான ஷேர் பிரிப்பதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் சில திரையரங்குகளில் அவதார் 2 ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது 6 நாட்களில் இந்த படம் உலகளவில் 4500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்தியாவில் மட்டும் 200 கோடியைத் தாண்டி வசூல் மழை பொழிந்து வருகிறது. உலகளவில் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 10000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடலூர் கடல் சீற்றம்!