வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடலூர் கடல் சீற்றம்!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதை அடுத்து கடலூர் கடல் சீற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் கடலில் சீற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், சீற்றத்துடன் கடல் அலை வீசுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளை 100 மீட்டர் வரை தள்ளி நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர் கடற்கரை அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடலூர் மட்டுமின்றி தென் தமிழகத்தின் கரையோர பகுதிகளில் கடல் வழக்கத்தைவிட சீக்கிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.