Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்ட காசை எடுத்தாச்சு… அவதார் அடுத்த பாகங்கள் கண்டிப்பா வரும்- ஜேம்ஸ் கேமரூன் தகவல்!

போட்ட காசை எடுத்தாச்சு… அவதார் அடுத்த பாகங்கள் கண்டிப்பா வரும்- ஜேம்ஸ் கேமரூன் தகவல்!
, சனி, 7 ஜனவரி 2023 (15:49 IST)
அவதார் 2 திரைப்படம் உலகளவில் 12000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துவிட்டதாம்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது 12000 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இதன் மூலம் போட்ட பணத்தை எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வரும் என ஜேம்ஸ் கேமரூன் தற்போது தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு இன்னும் தயார் ஆகவில்லையா?- கடைசி நேர குழப்பம்!