Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

மூவரையும் வெளியேற்றுங்கள்: கவின், சாக்சி, லாஸ்லியா எதிராக குவியும் விமர்சனங்கள்

Advertiesment
கவின்
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (08:57 IST)
பிக் பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா ஆகிய மூவரும் நடத்திவரும் முக்கோண காதல் நாடகத்தைக் கண்டு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வெறுப்பாகி உள்ளதால் மூவரையும் வெளியேற்றுங்கள் என்று கூறி வருகின்றனர் 
 
நேற்றைய நிகழ்ச்சியிலும் கவின், சாக்சி காதல் மோதல் தொடர்ந்தது. கவினும் சாட்சியும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை மட்டுமே எடுத்துக் கூறி மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். குறிப்பாக சாக்சி தனது நெருங்கிய தோழிகளான ஷெரின் மற்றும் ரேஷ்மா ஆகியோர்களையே கடுப்பேற்றிவிட்டார்.  இதனால் அவர்கள் நேற்று சாக்சி மீது கோபம் கொண்டு திட்டினர்.
 
மேலும் இதுவரை அமைதியாகவும் அழகாகவும் இருந்த லாஸ்லியாவும் நேற்று திடீரென கோபமாக பேசுவது, பேசிக்கொண்டிருக்கும்போது எழுந்து செல்வது, பிடிவாத குணத்துடன் இருப்பது, ஆகியவைகளால் பலரது வெறுப்பை சம்பாதித்துள்ளார். லாஸ்லியாவுக்கு அபிராமி மட்டுமே ஆதரவாக உள்ளார். ஒரு கட்டத்தில் சேரன் கடும் ஆத்திரமாகி மூன்று பேர்களும் தன்னிடம் பேசக்கூடாது என்று கூறியது லாஸ்லியாவை அதிகமாக காயப்படுத்தியதாக தெரிகிறது
 
கவின் மீது கடந்த சில நாட்களாகவே அனைவரும் வெறுப்பை தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தது. குறிப்பாக சேரன், சரவணன் ஆகியோர் கவின் மீது அதிகமாக கோபப்பட்டனர். கவின் நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே தெரிவித்தனர் 
 
மொத்தத்தில் கவின், லாஸ்லியா, சாக்சி ஆகிய மூவரும் வெளியேற்றினால்தான் பிக்பாஸ் வீட்டில் நிம்மதி இருக்கும் என்றும் மூவரும் வீட்டில் இருக்கும் வரை இந்த முக்கோண காதலுக்கு முடிவே இல்லை என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்த 8 மாநிலங்கள்