வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் 11 இஸ்லாமிய வேட்பாளர்கள் சுயேட்சையாகக் களமிறங்கியிருப்பது அதிமுகவின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. தங்களது வழக்கமான வாக்கு சதவீதத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனதுக்கான காரணமாக பாஜகவோடுக் கூட்டணி வைத்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்ததற்கு பாஜகவோடு கூட்டணி வைத்ததுதான் காரணம் என்கிற பொருளில் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார்.
இதையடுத்து இப்போது வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு செல்வதைத் தடுக்கும் பொருட்டு 11 சுயேட்சை இஸ்லாமிய வேட்பாளர்களை அதிமுக களமிறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வியூகம் அதிமுகவுக்கு வெற்றியைக் கொடுக்குமோ இல்லையோ திமுகவிற்கு செல்லும் வாக்குகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.