ரஜினிகாந்த் வீட்டு முன் ரசிகர் தீக்குளிக்க முயற்சி..

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (21:51 IST)
ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி வீட்டுக்கு முன் முருகேசன்(55) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சென்னை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவர் தான் அரசியல் கட்சித்  தொடங்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவரது இந்த மனமாற்றத்திற்கு உடல்நிலை காரணமாக இருந்தாலும், அவரது நெருங்கிய நண்பர்களான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு மற்றும் சிரஞ்சீவி இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதால் தங்கள் வீட்டார் கேலி செய்வார்கள் என்பதால் கடந்த மூன்று நாட்களாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன் காத்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி முருகேசன்(55) என்பவர் ரஜினி வீட்டுக்கு முன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments