இந்த தடவ மிஸ் ஆகாது… அஜித்தின் அட்டகாசம் படத்தின் ரி ரிலீஸ் தேதி உறுதி!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (16:52 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

இந்நிலையில் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘அட்டகாசம்’ அக்டோபர் 31 ஆம் தேதி ரி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்டபடி அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. படத்தை திரையரங்குகளுக்கு விநியோகிக்க முடியாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

படத்தைப் பார்க்க முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்குப் பணம் திருப்பி அனுப்பப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நவம்பர் 28 ஆம் தேதி படம் உறுதியாக ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர் படக்குழு. சமீபத்தில் படத்தின் புதிய டிரைலரையும் படக்குழு வெளியிட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்! பின்னணி என்ன?

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments