Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜவான் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்கும் அட்லி!

ஜவான் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்கும் அட்லி!
, திங்கள், 15 மே 2023 (14:11 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை முடித்ததும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்ததும் மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் முராத் கெடானி தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சலார் படத்தின் ரிலீஸில் மாற்றமா?... படக்குழு வெளியிட்ட அப்டேட்!