Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்லு அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த அட்லி… முதல் சந்திப்பிலேயே முற்றும்!

அல்லு அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த அட்லி… முதல் சந்திப்பிலேயே முற்றும்!
, செவ்வாய், 17 மே 2022 (09:10 IST)
விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார் அட்லி.

இயக்குனர் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய்யுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மற்ற சில ஹீரோக்களும் அவரிடம் கதைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்படி சமீபத்தில் புஷ்பா மூலமாக பேன் இந்தியா ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான முதல் சந்திப்பிலேயே அட்லி கேட்ட சம்பளத் தொகை அல்லு அர்ஜுனுக்கு ஷாக்கைக் கொடுக்க, அப்போதே அவர் இவ்வளவு சம்பளம் கொடுத்து உங்களை வைத்து படம் எடுக்க முடியாது என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அல்லு அர்ஜுன் – அட்லி திரைப்படம் நடக்க சாத்தியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Source Valaipechu

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விறுவிறுவென நடக்கும் ‘விக்ரம்’ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!