Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் கான் படத்தை இயக்கும் கேப்பில் சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?

ஷாருக் கான் படத்தை இயக்கும் கேப்பில் சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?
, செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:11 IST)
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்போது பரபரப்பாக ஷாருக் கான் படத்தை இயக்கி வரும் அட்லி, சமீபத்தில் மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானை சந்தித்து கதை ஒன்றை சொல்லியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் விரைவில் அவர் சல்மான் கானையும் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் ஷாருக் கான்  படத்தை முடித்ததும் அட்லி மீண்டும் விஜய்யை இயக்க உள்ளதாக சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 படத்தில் நடிகராக பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!