Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா வில் ஸ்மித்?... அட்லி போடும் ஸ்கெட்ச்!

Advertiesment
அட்லி

vinoth

, வியாழன், 19 ஜூன் 2025 (12:10 IST)
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆறு முன்னணிக் கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தீபிகா படுகோன் மற்றும் மிருனாள் தாக்கூர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை நடிக்க வைக்க அட்லி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அது நடைபெறும் பட்சத்தில் வில் ஸ்மித் நடிக்கும் முதல் இந்திய படமாக இந்த படம் அமையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸுக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் ‘DNA’!