Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோகத்தில் இருந்த அட்லிக்கு சந்தோஷமாக நடந்த ஒரு விஷயம்!

சோகத்தில் இருந்த அட்லிக்கு சந்தோஷமாக நடந்த ஒரு விஷயம்!
, வியாழன், 17 டிசம்பர் 2020 (10:21 IST)
அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கைதி புகழ் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தகாரம் படம் எடுக்கப்பட்டு 6 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்தது. அதை பார்த்து பிடித்து போன இயக்குனர் அட்லி அந்த படத்தை தனது தயாரிப்பின் கீழ் கொண்டு வந்து நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தார். அந்த படம் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து அந்த படத்தின் வெற்றி விழாவை சில நாட்களுக்கு முன்னர் அட்லி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். பிகில் படத்துக்கு பிறகு ஷாருக்கானை இயக்குவதாக பாலிவுட்டுக்கு சென்ற நிலையில் அந்த படம் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே செல்வதால் அப்செடில் இருந்தார். இந்நிலையில் அந்தகாரம் படத்தின் வெற்றி அவருக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 65 படத்துக்கு நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா? ஆச்சர்யத்தில் கோலிவுட்!