விஜய் படத்தை இயக்கும் நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் தரப்பில் 6 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
தமிழ் சினிமா ரசிகர்களால் இப்போது அதிகம் பேசப்படும் படமாக தளபதி 65ம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இருந்து வருகின்றனர். தான் இயக்கிய ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கும் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்தை இயக்க இருந்த இயக்குனர் முருகதாஸ் வெளியேறிய பின்னர் அவர் இடத்தை நிரப்ப விஜயாலும் சன் தொலைக்காட்சியாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தளபதி 65 படத்துக்காக நெல்சனுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நெல்சனுகு சன் பிக்சர்ஸ் இந்த படத்துக்கு 6 கோடி ரூபாய் என சம்பளம் ஒப்பந்தம் செய்துள்ளதாம்.