Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

vinoth

, ஞாயிறு, 5 ஜனவரி 2025 (12:44 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் இந்த படத்தை அட்லி ’பேபி ஜான் ‘ என்ற பெயரில் தயாரித்தார்.  இதற்காக ரீமேக் உரிமையாக மட்டும் 7 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க, இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்தனர். படத்தில் சல்மான் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஜாக்கி ஷ்ராஃப் வில்லனாக நடிக்க தமன் இசையமைத்திருந்தார்.  படம் பிரம்மாண்டமாக சுமார் 160 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது.  அனாலும் ரிலீஸுக்குப் பிறகு மோசமான விமர்சனங்களை இந்த படம் பெறத் தொடங்கியது. இதனால் இந்த படம் ரிலீஸாகி 11 நாட்களில் 50 கோடி ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளரான அட்லி மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!