Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளி போன அதர்வாவின் ‘தள்ளி போகாதே’ ரிலீஸ் தேதி

தள்ளி போன அதர்வாவின் ‘தள்ளி போகாதே’ ரிலீஸ் தேதி
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:46 IST)
தள்ளி போன அதர்வாவின் ‘தள்ளி போகாதே’ ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா நடித்த ’தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நின்னுகோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை பிரபல இயக்குனர் கண்ணன் இயக்கியுள்ளார் 
 
அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யூலேகா ராமன், ஆர்.எஸ்.சிவானி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர் கண்ணன் தயாரித்து இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஹத் பாசிலா நவாசுதீன் சித்திக்கா? கமலுக்கு வில்லன் தேடும் லோகேஷ் கனகராஜ்!