இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஸ்பெஷல் என்றால் அதைவிட ஸ்பெஷல் ஆர்ஜே பாலாஜி அதை தமிழில் தொகுத்து வழங்கியது தான் என்பது கூறலாம். அவருடைய காமெடியான கமெண்ட்ரியை அனைத்து தரப்பினர்களும் நன்றாக ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து பஞ்சாப் அணியின் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
தற்போது ஐபிஎல் முடிவுக்கு வந்துவிட்டது. அனைவரும் என்ஜாய் பண்ணி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஐபிஎல் முடிவுக்கு வந்துவிட்டதை அடுத்து நீங்கள் அனைவரும் என்டர்டைன்மென்ட்க்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். நானும் அதே போல்தான். புதுமையாக திரைப்படங்கள் பார்க்க வேண்டும் எனக்கு விருப்பமாக உள்ளது
இந்த நேரத்தில் நிறைய படங்கள் ரிலீஸாவது இல்லை. ஆனால் ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இது ஒரு பயங்கரமான ஸ்பெஷல் படம் என்று நினைக்கிறேன். கமெண்டரி பாக்ஸில் உட்கார்ந்து கொண்டு ஆர் ஜே பாலாஜி என்னை உள்பட எல்லாரையும் ஆர்ஜே பாலாஜி கலாய்த்தார். ஆனால் அவருடைய படத்தை பார்த்து அவரை கலாய்க்க வேண்டுமா அல்லது பாராட்ட வேண்டுமா என்பதை படத்தைப் பார்த்த பிறகு முடிவு செய்வோம் என்று கூறினார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா வேறு இருப்பதால் இது ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்