திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன் படம் பார்த்து பாரட்டியதை அரசியல் கட்சியினர் அரசியல் ரீதியாக விமர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷ ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை எனும் நாவல்தான் அசுரனாக திரைக்கு வந்தது.
ரசிகர்களின் வசூல் மழையிலும், சினிமா கலைஞர்களின் பாராட்டு மழையின் நனைந்த அசுரன் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்தார். அதன் பின்னர், அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என படக்குழுவினரை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டார்.
ஒரு படத்தை பார்த்து அதனை பாராட்டி ஒரு டிவிட் போட்டது பெரிய குத்தம் போல, ஸ்டாலினை அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய துவங்கினார். பாமக தலைவர் ராமதாஸ் ஒரே போட திமுகவின் முரசொலி இருக்கும் இடமே பஞ்சமி நிலம்தான் என கூறினார். இதற்கு ஸ்டாலின் முரசொலியின் பத்திரங்களை ஆதாரமாக காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். இன்னும் அவர்களின் வாதங்கள் ஓய்ந்ததாய் இல்லை.
இந்நிலையில், அடுத்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். ஜெயகுமார் கூறியதாவது, ஸ்டாலின் ஜமீந்தார் தோரனையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். ஜனநாயக நாடில் அனைவரும் சமம் என்று இல்லாமல் ஜமீதாரராக இருந்து படத்தை பார்த்துள்ளார், அந்த படத்தில் வரும் வடக்கூரான் எனும் வில்லன் கேரக்டர்தான் ஸ்டாலினுக்கு பொருந்தும் என பேசியுள்ளார்.
ஒரு படம் பார்த்து அதை பாராட்டியது குத்தம் என திமுக தலைவர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருவது திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.