Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா!

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:16 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
நெற்றிக்கண் படத்தை இயக்கிய மிலந்த் ராவ்என்பவர் அடுத்ததாக வெப்தொடர் ஒன்றை இயக்க உள்ளார். ஆர்யா, பசுபதி, வாணிபோஜன் உள்ளிட்ட பலர் இந்த் தொடரில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வெப்தொடர் அமேசான் ஓடிட் தளத்திற்காக உருவாக்கப்பட இருப்பதாகவும் இந்த தொடரில் மேலும் சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப்தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தொடர் அமேசான் ஒடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி கவர்ச்சியில் ஆள மயக்கும் அமைரா தஸ்தர்!