ரி ரிலீஸ் ஆகும் அருண் விஜய்-மகிழ் திருமேனியின் சூப்பர் ஹிட் படம்!

vinoth
புதன், 18 ஜூன் 2025 (10:11 IST)
கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன.  இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

அதே போல ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்கள் ரி ரிலிஸாகி கணிசமான வசூலை ஈட்டி வருகின்றன. இதனால் பழைய சூப்பர் ஹிட் படங்கள் தற்போது ரி ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி 2012 ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆன ‘தடையறத் தாக்க’ திரைப்படம் தரமுயர்த்தப்பட்டு ஜூன் 27 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமானப் படமாக அமைந்த படம் ‘தடையறத் தாக்க’ என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் பேரரசு..!

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments