படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் காயம்… புகைப்படத்தை பகிர்ந்து பதிவு!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:41 IST)
நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்த நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பின் போது அருண் விஜய் முழங்கையில் காயமடைந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments