Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கதாநாயகனாக ரி எண்ட்ரி கொடுக்கிறாரா கவுண்டமணி… ரசிகர்களுக்கு வந்த குஷி செய்தி!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:31 IST)
தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.

இப்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் தொலைக்காட்சிகள், இணையம், மீம்ஸ் வாயிலாக இன்னமும் ரசிகர்களின் தினசரி வாழ்வில் அவர் இருந்துகொண்டேதான் இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும், இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டமணி எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் கதாநயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments