Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ் தேதி இதுவா?

border
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:37 IST)
பிரபல நடிகர் அருண்விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் படத்தை வரும் 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ‘பார்டர்’ திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் சிங்கிள் பாடல் ரிலீஸ் பணிகளையும் படக்குழுவினர் ஆரம்பித்து உள்ளதாகவும் அது குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2: காஜல் அகர்வாலுக்கு பதில் இந்த நடிகையா?