Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நடிப்பது உறுதி… கவனம் ஈர்த்த புகைப்படம்!

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (10:11 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் மார்ஷல் ஆர்ட்ஸ் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதை உறுதிபடுத்துவது போல இயக்குனர் அருண் மாதேஸ்வரன், லோகேஷுடன் தான் இருக்கும் புகைப்படத்தில் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை… ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு SJ சூர்யா நன்றி!

KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments