பிரான்ஸின் உயரிய 'செவாலியர்' விருது: தமிழ் திரையுலக பிரபலத்திற்கு அறிவிப்பு!

Mahendran
செவ்வாய், 11 நவம்பர் 2025 (17:09 IST)
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 
தோட்டா தரணி அமைக்கும் செட்கள் நிஜத்தை விடவும் தத்ரூபமாக இருக்கும் என்ற பெயரை பெற்றவர். பல மொழிகளிலும் கலை வடிவமைப்பை மேற்கொண்டு, தேசிய விருதுகள் உட்படப் பல பாராட்டுகளை வென்றுள்ளார்.
 
கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படத்தில் வடிவமைக்கப்பட்ட தாராவி குடிசைப்பகுதி காட்சிகளும், 'இந்தியன்' திரைப்படத்தின் சுதந்திர போராட்ட காட்சிகளும், ரஜினிகாந்தின் 'சிவாஜி' திரைப்படத்தின் 'வாஜி வாஜி' பாடலுக்கான பிரம்மாண்டமான அரங்குகளும் இவரது கலைத்திறனுக்கு சான்றாகும்.
 
பிரான்ஸ் நாட்டின் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் இந்த செவாலியர் விருது தோட்டாதரணிக்கு  நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் அலையன்ஸ் வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
 
முன்னதாக, தமிழ்த் திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த செவாலியர் விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செம கடுப்புல எழுதுன ரவிமோகனின் அந்த பாடல்.. பாட்டு எந்தளவு ஹிட் தெரியுமா?

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

அடுத்த கட்டுரையில்
Show comments