சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் சிம்பு 48 படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெட் காரணமாக இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்த சிம்பு தானே அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஆட்மென் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் படம் ஆரம்பிக்கும் அறிகுறியே தெரியவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் கலை இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எஸ் எஸ் மூர்த்தி சமீபத்தில் அளித்த நேர்காணலில் படம் பற்றி பேசியுள்ளார். அதில் “சிம்பு 48 திரைப்படம் பாகுபலி போல ஒரு வரலாற்றுப் புனைவு படம். இந்த படம் ராஜமௌலி மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி சேர்ந்து இயக்கியது போல இருக்கும்” எனக் கூறியுள்ளார்.