Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

அர்ஜுன் இயக்கும் பேன் இந்தியா திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

Advertiesment
அர்ஜுன் இயக்கும் பேன் இந்தியா திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:48 IST)
நடிகர் அர்ஜுன் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் மிக முக்கியமான நடிகராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார்.

ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடிகர் அர்ஜுனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தொடங்குவதில் தாமதம்!