அர்ஜுன் நடித்த ஏழுமலை என்ற திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அர்ஜுன் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தில் தனது மருமகன் மற்றும் மகளை நடிக்க வைக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னும் ஐஸ்வர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் இரண்டு கன்னட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் சூப்பர் ஹிட் படமான ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தில் உமாபதி நாயகனாகவும் ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் கேரக்டரில் உமாபதியும், சிம்ரன் கேரக்டரில் ஐஸ்வர்யாவும் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ஏழுமலை முதல் பாகத்தில் தொடர்ச்சியான கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.