Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு

tirupathi

Siva

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:50 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசனம் செய்யும் டிக்கெட், தங்கும் இடத்திற்கான டிக்கெட், ஆகியவை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தரிசன டிக்கெட் தேர்வு செய்யப்படும் என்றும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு மின்னணு டிக்கெட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சேவைகளில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை, பிரமோற்சவம் ஆகிய சேவைகளுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி டிக்கெட் வெளியிடப்படும் என்றும் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அதே நாளில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள்,  மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிண்டன்பர்க் அறிக்கைகளை எந்த நாடும் மதிப்பதே இல்லை.. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்