Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை கூறிய பாலியல் புகாரை மறுத்த அர்ஜூன்...

Advertiesment
நடிகை கூறிய பாலியல் புகாரை மறுத்த அர்ஜூன்...
, சனி, 20 அக்டோபர் 2018 (18:28 IST)
அண்மைக்காலமாக பல்வேறு துறைகளில் இருக்கும் பிரபலமானவர்களின் மீது பாலியல் புகார் வருவது அதிகரித்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மீ டூ இயக்கமும் இணையதளம் வாயிலாக செயல்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சிதான் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதனையடுத்து நடிகர் ராதாரவி மீதும் ஒரு இணையதள பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில் ஆக்ஸன் கிங் என்று தமிழர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜூன் மீது பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
 
நடிகர் அர்ஜூனுடன் 'விஸ்மயா' என்ற திரப்படத்தில் நடித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி தெரிவித்திருக்கிறார். இந்த புகார் பற்றி அர்ஜீன் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படாமலிருந்தது.
 
இந்நிலையில் இதுபற்றி நடிகர் அர்ஜூன்  இதுபற்றி முதன் முதலாக வாய் திறந்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:
 
நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை, ஸ்ருதியின் பின்ணணீயில் யாரோ உள்ளதாக அர்ஜூன் விளக்கம் அளித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜான் விஜய் மன்னிப்பு கேட்டு விட்டார் - ஸ்ரீரஞ்சனி பேட்டி