அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

vinoth
வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:35 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது.

இந்த படத்தில் மணிகண்டன், கண்ணா ரவி மற்றும் ஸ்ரீகௌரி பிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ஆவரேஜான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகி வருகிறது இந்த படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம்.

இந்நிலையில் இப்போது இந்த நிறுவனம் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments