Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 கே கிட்ஸ்களை வெகுவாகக் கவர்ந்த லவ்வர் ஓடிடியில் ரிலீஸானது? எந்த தளத்தில் தெரியுமா?

Advertiesment
2 கே கிட்ஸ்களை வெகுவாகக் கவர்ந்த லவ்வர் ஓடிடியில் ரிலீஸானது? எந்த தளத்தில் தெரியுமா?

vinoth

, வியாழன், 28 மார்ச் 2024 (07:22 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் மணிகண்டன், கண்ணா ரவி மற்றும் ஸ்ரீகௌரி பிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம். இந்த படம் இளைஞர்களை கவர்ந்தாலும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் 50 நாட்களுக்கு மேல் தற்போது வரை ஓடிவரும் லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவில் ஷூட்டிங்- தேர்தலில் விஜய் ஓட்டுப்போடுவாரா?