ரஜினி சாரை வைத்து வித்தியாசமாக எதுவும் பண்ண முடியாது… ஏ ஆர் முருகதாஸ் கருத்து!

vinoth
புதன், 20 ஆகஸ்ட் 2025 (10:03 IST)
ஷங்கருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குனராக உருவாகி வந்தார் முருகதாஸ். ஆனால் தர்பார், சிக்கந்தர் என அவரது அடுத்தடுத்த படங்கள் படுதோல்வி அடைந்து அவருக்கு ஒரு சிறு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளன.

இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அளித்த ஒரு நேர்காணலில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவதில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ரஜினி சார் போன்ற பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கும்போது நாம் புதிதாக எதுவும் பண்ண முடியாது. அவர் செய்ததிலேயே வித்தியாசமாக எதாவது பண்ணலாம். ஆனால் கமல் சார் போன்ற பெரிய நடிகரை வைத்தும் நாம் பரிசோதனை முயற்சிகளை பண்ணலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments