விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்திலும் அதை செய்திருக்கிறேன்… முருகதாஸின் செண்ட்டிமெண்ட் பலன் கொடுக்குமா?

vinoth
திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (15:48 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘அமரன்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் ‘மதராஸி’ படத்தின் வியாபாரத்தில் பலன் கிடைத்துள்ளது. நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.

அப்போது பேசிய இயக்குனர் முருகதாஸ் “விஜய் சாரோடு நான் இணைந்து பணியாற்றிய மூன்று படங்களிலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பேன். அதே போல இப்போது சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments