2017 ஆண்டுக்கான இந்திய கல்வி அறிக்கை (ASER), வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வெளியாகி இருக்கும் தகவல்கள் பல அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக இந்திய கிராமப்புறங்களில் கல்வித்தரம் தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
# ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு, 57 சதவீத மாணவ, மாணவியர்களால் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட எளிய கணக்குகளுக்கு கூட விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
# 14 சதவீத மாணவர்களுக்கு இந்தியாவின் வரைபடமே தெரியவில்லை. 36 சதவீத மாணவ, மாணவியருக்கு நாட்டின் தலைநகர் எதுவென்று தெரியவில்லை.
# 21 சதவீத மாணவ-மாணவியருக்கு எந்த மாநிலத்தில் வசிக்கிறோம், அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
# 40 சதவீத குழந்தைகளால் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடங்கள் உள்ளது என்பதும் தெரியவில்லை.
# சுமார் 25 சதவீத தங்களது அடிப்படை மொழிகளை வாசிக்க தெரியாதவர்களாய் உள்ளனர்.