Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்சுமி மேனனுடன் திருமணமா? ஆவேசமாக விஷால் அளித்த பதில்!

Advertiesment
லட்சுமி மேனனுடன் திருமணமா? ஆவேசமாக விஷால் அளித்த பதில்!
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (12:24 IST)
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விஷாலும் லட்சுமி மேனனும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இது ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து இப்போது அதற்கு விஷால் விளக்கமளித்துள்ளார்.
இது சம்மந்தமாக விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வழக்கமாக நான் என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்குப் பதில் அளிப்பதில்லை. ஏனென்றால் அது பயனற்றது. ஆனால் இப்போது எனக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணம் என்று பரவும் வதந்திகளை நான் மறுக்கிறேன்.

நான் இதை மறுக்கக் காரணம், இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் பெயர் இழுக்கப்பட்டு இருப்பதால்தான். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பாழாக்குகிறீர்கள்.

என்னுடைய திருமணம் பற்றிய தகவல் ஒன்றும் பெர்முடா முக்கோணம் இல்லை. சரியான தருணம் வரும்போது நானே என்னுடைய திருமணம் பற்றி அறிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்போதாவது ஹாலிவுட்டுக்கு செல்லுங்கள்… கமல்ஹாசனுக்கு ஏ ஆர் ரஹ்மான் கோரிக்கை!