Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

RRR படம் ஆஸ்கருக்கு சென்றால் 99 சதவீதம் விருதைப் பெறும்… பாலிவுட் இயக்குனர் கருத்து

RRR படம் ஆஸ்கருக்கு சென்றால் 99 சதவீதம் விருதைப் பெறும்… பாலிவுட் இயக்குனர் கருத்து
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:34 IST)
இந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தைரியமாக தனது கருத்துகளை சொல்லி வருபவர்.

பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் டாப்ஸி இயக்கத்தில் டோபாரா என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் பாலிவுட் படங்கள் தன்னை கவர்வதில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் “தென்னிந்திய படங்களை இயக்குனர்கள் தங்கள் வேர்களில் இருந்து உருவாக்குகின்றனர். அதனால் வெற்றி பெறுகிறது. RRR படம் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் மேற்கில் அந்த படத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு RRR படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டால் 99 சதவீதம் விருதை வெல்ல வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பாவை ‘சார்’ என அழைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிதி ஷங்கர்!