அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (08:38 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.

சமீபகாலமாக அவரின் இயக்கத்தில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் லியோ மற்றும் மகாராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் நடித்த ரைபிள் கிளப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அங்கே பெரியளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் தமிழில் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார். சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் Unkill-123 என்ற படத்தில் அவர் மைய வேடத்தில் நடிக்க அந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த், இசையமைப்பாளராக ஜெரால்ட், எடிட்டராக நேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments