Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்தார்த்-ஷர்வானந்த் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் நாயகி!

சித்தார்த்-ஷர்வானந்த் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் நாயகி!
, திங்கள், 19 அக்டோபர் 2020 (10:50 IST)
சித்தார்த்-ஷர்வானந்த் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் நாயகி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படம் ’நம்ம வீட்டுப் பிள்ளை’. இந்த படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அனு இமானுவேல் தற்போது தெலுங்கில் தயாராகி வரும் திரைப்படம் ஒன்றில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சர்வானந்த் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ’மகா சமுத்திரம்’ என்ற  திரைப்படத்தில் ஏற்கனவே அதிதிராவ் ஹைத்ரி ஒரு நாயகியாக நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாயகியாக அனு இமானுவேல் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் 
விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை அஜய்பூபதி என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோஃபாவில் கவர்ச்சி... வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் பார்ட்டி உடை போட்டோஸ்!